1989ல் தொடங்கிய கூடங்குளம் போராட்டம்.. முதல் முறையாக நடந்த வன்முறை, தடியடி!

கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய சோவியத் யூனியன் அதிபரான கோர்பசேவுக்கும் இடையே கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பது தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை அமைத்துத் தர ரஷ்யா ஒப்புக் கொண்டது.
இருப்பினும் சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு உடைந்து சிதறியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவில் நிலவிய அரசியல், சமூக குழப்பங்களாலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 1989ம் ஆண்டே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் எழத் தொடங்கின. ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவிலேயே போராட்டங்கள் இருந்தன. இதனால் அரசுகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வப்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் என்றுதான் போராட்டங்கள் இருந்து வந்தன. இதனால் போராட்டங்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஏன் இது பெரிய செய்தியாகக் கூட மீடியாக்களில் இடம் பெறவில்லை.
2001ம் ஆண்டுதான் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடக்க ஆரம்பித்தன. அதன் பின்னர்தான் போராட்டங்கள் சற்று வலுப் பெறத் தொடங்கின. 2002ம் ஆண்டு அப்போதைய சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவு தலைமையில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடந்தபோதுதான் கூடங்குளம் குறித்து சற்றே சிறிய அளவிலான விழிப்புணர்வு பிற பகுதிகளில் ஏற்பட்டது.
இந்த நிலையில், 2011ம் ஆண்டு உதயக்குமார் தலைமையிலான அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளம் போராட்டத்தை புதிய களத்திற்குக் கொண்டு சென்றது. இடிந்தகரையில் முகாமிட்டு அவர்கள் தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது.
உதயக்குமார் குழுவினரின் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் புதிய பரபரப்பும் ஏற்பட்டது. உதயக்குமாருக்கு முன்பு வரை நடந்த போராட்டங்களின்போது எந்தவிதமான வன்முறையும் வெடித்ததில்லை. போலீஸார் பலத்தைப் பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் இன்று முதல் முறையாக கூடங்குளம் மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு நிலைமை போயுள்ளது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்தியுள்ளது.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications