கூடங்குளத்தில் வெடித்தது கலவரம், போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு மக்களும் தாக்குதலில் இறங்கியதில் போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நேற்று சரமாரியாக மக்கள் குவிந்தனர். பல ஆயிரம் பேர் குவிந்து விட்டதைத் தொடர்ந்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் கடலோரத்தில் மக்கள் குவிந்திருந்ததால் விபரீதம் ஏற்படு் என்ற அச்சத்தில் போலீஸார் தடியடி உள்ளிட்டவற்றில் ஈடுபடாமல் இருந்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர், டிஐஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் பயனில்லை. இதையடுத்து நேற்ஏறு இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நீடித்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகினர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு கலெக்டர் இறுதிக் கோரிக்கையை விடுத்தார். அனைவரும் சட்டவிரோதமாக கூடியுள்ளீர்கள். உடனடியாக அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்தார்.
இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களும் மணலை வாரி போலீஸார் மீது சரமாரியாக வீசினர். செருப்புகளையும் எடுத்து வீசினர். கட்டைகளும் வீசப்பட்டன. இதையடுத்து போலீஸார் திமுதிமுவென கடற்கரையில் கூடியிருந்தர்களை தடியடி நடத்தி விரட்டிச் சென்றனர். இதில் பலர் கீழே விழுந்தனர். தொடர்ச்சியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
இதையடுத்து ஏராளமானவர்கள் கடலுக்குள் இறங்கி போலீஸாரை நோக்கி கடுமையாக திட்டி கூச்சலிட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது மீண்டும் மண் வீசப்பட்டது. பலர் படகுகள் வழியாக கடலுக்குள் தப்பிச் சென்றனர்.
இந்த திடீர் திருப்பத்தால் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.
-
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!













Click it and Unblock the Notifications