கூடங்குளம் பிரச்சனை: தயார் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை: கூடங்குளத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீசியதைத் தொடர்ந்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு கூடங்குளம் சென்றது. இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் நேற்று பகலில் போராட்டக்குழுவினரை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டை வீசினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்களை உடனடியாக அனுப்புமாறு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் ஏற்பாட்டில் குழந்தைகள் நல டாக்டர்கள் உள்பட 6 டாக்டர்கள், நர்சுகள், அவசர சிகிச்சைப் பிரிவு உதவியாளர்கள், ரத்த சேமிப்பு பிரிவினர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுடன் ஏராளமான மருந்து பொருட்கள் அடங்கிய வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் பிரச்சனை காரணமாக யாராவது காயம் அடைந்து வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அனைத்து பிரிவு ஊழியர்களும் சிறப்பு விடுப்பு எதுவும பெறாமல் தயார் நிலையில் பணியில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications