தேமுதிக பிரமுகர் கள்ளத்தொடர்பு: மகன்-மகளை எரித்து கொன்ற மனைவி தீக்குளித்து பலி
திருத்தணி: திருத்தணி அருகே தேமுதிக பிரமுகர் ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்து மனமுடைந்த அவரது மனைவி, 2 குழந்தைகளை எரித்து கொலை செய்துவி்ட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இ.எம்.ஆர்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் ஆர்.கே.பேட்டை ஒன்றிய தேமுதிக அவைத் தலைவராக உள்ளார். இவருக்கு ரேகா(24) என்ற மனைவியும், லாவண்யா(5) என்ற மகளும், ராகுல்(4) என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் ரவிக்கு அதே பகுதியில் வசித்து வந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரேகா, கணவனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் அதை கண்டுக் கொள்ளாத ரவி, தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்த வந்ததாக தெரிகிறது. இதனால் ரேகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ரவியின் வீ்ட்டு ஜன்னல்களில் இருந்து அதிகளவில் புகை வெளியே வந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ஓடி வந்து பார்த்த போது ரேகாவும், அவரது 2 குழந்தைகளும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
3 பேரையும் மீட்ட அப்பகுதியினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதிகளவில் தீக்காயமடைந்திருந்த 3 பேரும் அதற்குள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் நசீர் முகமது சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். மனைவியும், இரு குழந்தைகளும் பலியான நிலையில் ரவி இன்னும் பார்க்க வரவில்லை.
எனவே தலைமறைவாக உள்ள ரவி, 3 பேரின் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications