பாஜகவின் பிரதமர் வேட்பாளர்... 'ஒன் இந்தியா' வாசகர்கள் ஆதரவு மோடிக்கு!

ஒன்இந்தியாவின் தமிழ் இணையதளம் சார்பில் அரசியல், நிர்வாக அனுபவ அடிப்படையில் பாஜக கூட்டணியில் பிரதமர் பதவிக்கு மிகவும் ஏற்றவர் யார்?என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா சுவராஜ், நிதீஷ் குமார், அருண் ஜேட்லி ஆகியோரது பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கேக் கிடைத்துள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி வரை வாக்களித்திருந்த மொத்தம் 17,269 பேரில், மோடிக்கு 71 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது மொத்தம் 12,457 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். 2வது இடத்தில் அத்வானி வருகிறார். அவருக்கு வெறும் 10 சதவீத வாக்குகளே கிடைத்தன.
3வது இடத்தில் ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் 9 சதவீத ஆதரவுடனும், 4வது இடத்தில் சுஷ்மா சுவராஜ் 4.7 சதவீத ஆதரவுடனும், 5வது இடத்தில் அருண் ஜேட்லி 3.7 சதவீத ஆதரவுடனும் உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவது என்பது எளிதானது அல்ல என்பதும் முக்கியமானது. காரணம், நிதீஷ் குமார் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மோடியை வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என்றும் அவர் ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 64 சதவீதம் பேரின் ஆதரவு நிதீஷ் குமாருக்குக் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications