காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை: பாக்கெட்டில் தாலி
ஈரோடு: பெருந்துறை அருகே திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியைவிட்டுவிட்டு வாலிபர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை அருகே உள்ள பணிக்கம்பாளையம் முள்வாடியூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரபு(28). பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவர் தன்னுடன் வேலை பார்த்த ஜென்சி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவரை மணந்து பெருந்துறையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று தனது பைக்கில் ஈங்கூர் சென்றுள்ளார். பின்னர் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளம் பக்கம் சென்றுள்ளார். தண்டவாளத்திற்கு அருகில் நின்று யாருடனோ அவர் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் அவர் கழுத்தில் ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டானது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுவின் பாக்கெட்டை சோதனை செய்ததில் அதில் தாலிக்கயிறும், செல்போனும் இருந்தது. தாலியைப் பார்க்கையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக அவர் தாலியைக் கழற்றி பிரவு கையில் கொடுத்திருக்கலாம் என்றும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரபு தனது பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் என்று கூறப்படுகின்றது. திருமணமான 2 மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications