அட ஏங்க நீங்க வேற, நான்தாங்க ஆண்களிடம் ஏமாந்து விட்டேன்... ஷானாஸ்

50 பேரை மோசடியாக திருமணம் செய்து பணம், பொருளை சுட்டுக் கொண்டு ஓடி விட்டார் என்பது ஷானாஸ் மீது சில ஆண்கள் கொடுத்த புகார். இந்தப் புகார்களைப் பெற்ற சென்னை போலீஸார் ஷானாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தத் தேடுதலில் அவர் பெங்களூர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வைத்துப் பிடிபட்டார்.
அவரை சென்னைக்குக் கொண்டு வந்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த சித்திக், சினிமா கலை இயக்குநர் ராகுல், புளியந்தோப்பு பிரசன்னா உள்ளிட்ட 4 பேரை மட்டுமே தான் மணந்ததாக ஷானாஸ் கூறியிருந்தார். அதில் தற்போது புளியந்தோப்பு பிரசன்னாவின் குழந்தையை அவர் வயிற்றில் சுமப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு நாள் காவலில் ஷானாஸை எடுத்துப் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், நான் எந்த ஆணையும் ஏமாற்றவில்லை. ஆனால் நான்தான் ஆண்களை நம்பி ஏமாந்து போய் நிற்கிறேன். என்னை நம்ப வைத்து அத்தனை பேரும் ஏமாற்றி விட்டனர் என்று கூறியுள்ளாராம் ஷானாஸ்.
இதற்கிடையே, ஷானாஸ் வைத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆக்டிவாவில் ஏறித்தான் சென்னையைச் சுற்றி வந்துள்ளாராம் ஷானாஸ்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் தன்னை நம்ப வைத்து மோசடி செய்த ஆண்கள் மீது புகார் கொடுக்க ஷானாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தனது குழந்தைக்கு யார் தந்தை என்பது தொடர்பாகவும் அவர் ஒரு வழக்குப் பதிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications