கட்டணத்தை உயர்த்தும் ஷேர் ஆட்டோ, ஸ்கூல் வேன் உரிமையாளர்கள்

டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து விட்டது மத்திய அரசு. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் அடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயரப் போகிறது. லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் வாடகைக் கட்டணம் மிகக் கடுமையாக உயரப் போகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள், பள்ளிக்கூட வேன்கள் ஆகிய டீசலில் ஓடும் வாகனங்களும் கடும் பாதிப்பை சந்திக்கப் போகின்றன.
இந்த நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறோம். சிங்கிள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் கடுமையாக சண்டை போட்டபடிதான் ஒவ்வொரு நாளையும் நாங்கள் தள்ளி வருகிறோம். இந்த நிலையில் அரசு டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதை நிச்சயம் எங்களால் தாங்க முடியாது. கண்டிப்பாக நாங்கள் கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பிழைக்க முடியாது என்றார்கள் குமுறலுடன்.
பள்ளிக்கூடத்திற்கு வேன் வாடகைக்கு விட்டு வரும் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், நிச்சயமாக கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலையில் உள்ளோம் சார். வேறு வழியில்லை. ஏற்கனவே நாங்கள் குறைந்த கட்டணத்தில்தான் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று வருகிறோம்.
இடையில் ஜியோன் பள்ளி விவகாரத்தைத் தொடர்ந்து போலீஸாரின் கெடுபிடி மிக மோசமாக உள்ளது. கண்ட இடத்திலும் வண்டியை நிறுத்தி அது சரியில்லை, இது சரியில்லை என்று அபராதம் என்று கூறி பணம் வசூலிக்கிறார்கள். இந்த நிலையில் டீசல் விலை உயர்வால் நாங்கள் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications