குவாரிக்காக தனியார் சொத்தை மிரட்டி வாங்கியதாக பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் ஒரு புகார்!
கரூர்: கரூரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான சொத்தை கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாக மதுரை எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு மதுரை கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், எனது மனைவிக்கும் சொந்தமான சொத்துகள், கரூர் மாவட்டம், நாகனுர் கிராமத்தில் உள்ளது. எனக்கும், மனைவிக்கும் சொந்தமான குவாரி உட்பட மொத்தம் 12 ஏக்கர் 42 சென்ட் பகுதியை பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, வண்டல் கரட்டுப்பட்டியில் உள்ள அவரது அக்கா மகன் காந்தி, சண்முகம் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டி, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கிரயப்பத்திரம் எழுதி வாங்கி கொண்டனர். எனது சொத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
நிலத்திற்காக அவர்கள் கொடுத்த பணத்தை நான் திரும்ப தருகிறேன். எனது சொத்துகளை மீட்டு தர வேண்டும். பி.ஆர்.பழனிச்சாமி, அவரது அக்கா மகன் காந்தி மற்றும் சண்முகம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், கரூர் எஸ்.பி. சந்தோஷ்குமார் விசாரித்து வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications