புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு: 300 தமிழரை இலங்கைக்கு நாடு கடத்துகிறது இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 பேர் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் அவர்களை இங்கிலாந்து குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது முறையாக பலநூறு பேர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.

எனினும் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்குள்ளாக நேரிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+