வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் தர முடியாது: கர்நாடக முதல்வர்

பல ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து கர்நாடக முதல்வர் கெஜதீஷ் ஷெட்டர் நேற்று பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்க முடியாது என்று காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிப்பது என்று அந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகாவின் 142 தாலுகாக்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது என்பதற்கான புள்ளிவிவரத்தை நாங்கள் பிரதமரிடம் தெரிவிப்போம். இங்கே வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தர முடியாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் விளக்குவோம் என்றார்.
இதற்கிடையே காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்திற்கு எதிராக முடிவு எடுத்துவிடாமல் இருக்க மத்திய அரசை வலியுறுத்தக் கோரி மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்தது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக மாநில நீர் வள அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications