19ல் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம்: கர்நாடகம், தமிழகம் இடையே அனல் பறக்கும் விவாதம்?

9 ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 19ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரும் 20ம் தேதி வரை தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்க முடியாது என்று காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிப்பது என்று அந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பா நெல் சாகுபடிக்காக காவிரியில் நீர் திறந்து விடுமாறு கூட்டத்திற்கு வரும் கர்நாடக முதல்வரிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளார். இது தவிர காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தவுள்ளார்.
காவிரி நீரைப் பெறுவதில் தமிழகமும், கூடுதல் நீரை கொடுக்க மாட்டோம் என்பதில் கர்நாடகமும் பிடிவாதமாக உள்ளது. இதனால் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications