திமுக சார்பில் புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்க மாட்டார்கள்- கருணாநிதி

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அப்போது கூடுதல் இலாக்காக்களை வைத்துள்ள அமைச்சர்களிடம் இருந்து அவை பறிக்கப்படும் என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நிதி, உள்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிற அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று பேசப்படுகிறது.
திமுக அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் பதவி விலகியதை அடுத்து இரண்டு காலியிடங்கள் உள்ளன. அந்த 2 இடங்களையும் திமுகவுக்கே அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறாராம். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அண்மை காலமாக மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் தான் திமுக தனது அதிருப்தியைக் காட்ட இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் திமுக ஒரு வேளை மனம் மாறி அமைச்சரவையில் சேர விரும்பினால் டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் அமைச்சராகலாம் என்று தெரிகிறது. மேலும் டி.கே.எஸ். இளங்கோவனும் அமைச்சராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications