ராகுல் காந்தி பற்றி பேசக் கூடிய தகுதியற்றவர் மோடி: காங். கண்டனம்
டெல்லி: ராகுல் காந்தியை இன்டர் நேஷனல் தலைவர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தியைப் பற்றி பேசக் கூடிய தகுதியற்றவர் மோடி. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்தான். இப்போது ராகுல்காந்தியைப் பற்றிய தற்போதைய நிலைப்பாடு குறித்து பின்னர் மோடி உணர்வார் என்றார் அவர்.
பிரதமர் பதவி வேட்பாளர்களாக ராகுல் மற்றும் மோடி இடையே போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் தரப்பில், மோடி, குஜராத் மாநில தலைவர் ..ராகுல் காந்தியோ தேசியத் தலைவர் என்று கூறியிருந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல.. இன்டர்நேஷனல் தலைவரும் கூட... அவர் இந்தியாவில் மட்டுமல்ல.. இத்தாலியிலும் கூட போட்டியிட்டு வெல்வார் என்று நக்கலடித்திருந்தார் நரேந்திர மோடி. இதற்கு காங்கிரஸ் தரப்பு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications