முதல்வர் பதவியை ஏற்க நான் ரெடி: நேரம் பார்த்து பேசும் சிரஞ்சீவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பின்னணி பாடகி ஜானகிக்கு லலிதாகலா பரிஷத் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சிரஞ்சீவி ஜானகிக்கு தங்ககாப்பு அணிவித்தார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, நடிகைகள் ஜெயப்பிரதா, வாணிஸ்ரீ, நக்மா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சரவை மாற்றத்தோடு சேர்த்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை மாற்ற கட்சி மேலிடம் ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொது விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கிரண் குமார் ரெட்டியை தூக்கிவிட்டு உங்களை முதல்வராக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, அந்த தகவல் உண்மை இல்லை. வரும் 2014ம் ஆண்டு வரை அவர் தான் ஆந்திர முதல்வர் என்றார்.
நீங்கள் முதல்வர் ஆவீர்களா என்று கேட்டதற்கு, கட்சி மேலிடம் என்ன பதவி அளிக்குமோ என்று நானும் உங்களைப் போலத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்சி மேலிடம் என்ன பதவி கொடுத்தாலும் ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.
கிரண் குமார் ரெட்டியை மாற்ற சோனியா நினைக்கையில் எந்த பதவி கொடுத்தாலும் ஏற்பேன் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications