காரில் போகும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் சென்ற அன்புமணி
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையை போட்டது வன்னியன். ஆனால் இந்த சாலையில் காரில் போகும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர். அன்புமணி ராமதாஸ்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக சேலம் செரிரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட பாமகவினர் பிரட்ஸ் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வன்னியர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராடிய வன்னியர்களில் 21 பேர் உயிர் இழந்தனர். டாக்டர் ராமதாஸ் தலைமையில் 1 வாரம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போலீஸ் தடியடி தாக்குதலில் 21 பேர் பலியானதால் நாம் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டோம். ஆனால் அன்று கருணாநிதியோ வன்னியர் சமுதாயம் உள்பட 108 சமுகத்தை எம்.பி.சி. பட்டியலில் தந்திரமாக சேர்த்துவிட்டார்.
தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையக வாழும் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி ஒதுக்கீடு வேண்டும். ஆனால் தற்போது வெறும் 5 சதவீத ஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நாம் தமிழகத்தை ஆண்ட பரம்பரை. ஆனால் தற்போது ஆண்டிகளாக இருக்கிறோம்.
கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையை போட்டது வன்னியன். ஆனால் இதே சாலையில் காரில் செல்லும் ஒரு வன்னியனைப் பார்க்க முடியுமா என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications