பார்ட் டைம் வேலை செய்த நிறுவனத்தின் குளியலறையில் கல்லூரி மாணவி கொலை
ஓசூர்: கல்லூரி மாணவி தனியார் நிறுவன குளியலறையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனிதேவி நகரைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் அருணா, அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஓசூரில் உள்ள டிரான்ஸ் இந்தியா கார்ப்பரேஷன் என்ற ஷேர் மார்க்கெட் தொடர்பான நிறுவனத்தில் பார்ட் டைம் வேலையும் செய்து வந்துள்ளார்.
ஓசூர் ரெயின்போ கார்டனில், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள ஒரு வீட்டில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணி அளவில் மாணவி அருணா, வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அருணா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அருணா வேலை பார்த்த தனியார் நிறுவன அலுவலகத்தின் குளியல் அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு போலீசார் சென்று பார்த்தபோது மாயமான கல்லூரி அருணாதான் என்பது உறுதியானது. அருணாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற யாரோ ஒருவன்தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications