20ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய அரசு கடந்த 13ம் தேதி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்த்தியதன் விளைவாக தமிழ்நாட்டில் ரூபாய் 6.07 அளவிற்கு வரிகள் உள்பட உயர்ந்துள்ளது. இந்திய அரசு மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதன் விளைவாக மேலும் கூடுதல் சிலிண்டர்களை ரூபாய் 400 அளவிற்கு அதிகமாக கொடுத்து சந்தை விலையில் பெற வேண்டும். இது மட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய நாட்டு கம்பெனிகள் முதலீடு போடுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவுகள் சாதாரண ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும்.
அன்றாட வாழ்க்கையே அவர்களுக்கு பிரச்சினையாகிவிடும். இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்த்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் வருகிற 20-9-2012 வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. இதை தேமுதிக சார்பில் நான் வரவேற்பதுடன், முழு அடைப்பு போராட்டத்திலும் தேமுதிக கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications