கேட்டின் டாப்லெஸ் படங்களை வெளியிட பிரெஞ்சுப் பத்திரிகைக்குத் தடை-போட்டோக்களை ஒப்படைக்கவும் உத்தரவு

இளவரசர் வில்லியமும், மனைவி கேட் மிடில்டனும் தூர கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரான்ஸில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்தபோது, கேட் மிடில்டனின் டாப்லெஸ்ஸாக இருந்ததை ரகசியமாக படம் பிடித்து விட்டனர். இந்தப் படங்களை பிரான்ஸைச் சேர்ந்த குளோசர் என்ற பத்திரிக்கை முதலில் வெளியிட்டது. இதையடுத்து இத்தாலியைச் சேர்ந்த சி என்ற பத்திரிக்கை ஸ்பெஷல் எடிஷனே வெளியிடப் போவதாக அறிவித்தது. மொத்தம் 50 படங்களை பிரசுரிக்கப் போவதாகவும் அது கூறியிருந்தது.
இந்த நிலையில் குளோசர் பத்திரிக்கைக்கு எதிராக பாரீஸ் கோர்ட்டில் வில்லியம், கேட் மிடில்டன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாரீஸ் கோர்ட், தற்போது குளோசர் பத்திரிகைக்கு சாட்டையடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவின் சில முக்கிய அம்சங்கள்..
- இனிமேல் ஒரு படத்தைக் கூட குளோசர் பத்திரிக்கை பிரசுரிக்கக் கூடாது.
- தன்னிடமிருக்கும் கேட் மிடில்டனின் டாப்லெஸ் படங்கள் மற்றும் அது அடங்கிய பத்திரிக்கை நகல்களை 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.
- இந்தப் பத்திரிக்கை இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதற்காக எப்படிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்பதை காவல்துறையே சுயேச்சையாக தீர்மானித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
- படங்களை வெளியிட்டதில் கேட்மிடில்டனின் தனிமை உரிமையை இந்தப் பத்திரிக்கை மீறியிருப்பது தெரியவந்தால் தனியாகவும் நடவடிக்கை எடுக்கலாம்.
- இந்த உத்தரவுகளை குளோசர் பத்திரிக்கை மீறினால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் அது 10,000 யூரோவை அபராதமாக கட்ட வேண்டும்.
- கேட் மிடில்டனின் படங்களை குளோசர் பத்திரிக்கையின் பப்ளிசர் யாருக்காவது வீற்றிருந்தால் அவருக்கு 80,720 பவுண்டு அபராதம் விதிக்கப்படும்.
என்று உத்தரவில் அதிரடியாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வில்லியமும், கேட் மிடில்டனும் தற்போது உலகின் 4வது குட்டி நாடு என்ற பெருமையைப் பெற்ற சின்னஞ் சிறிய தீவான தூவலு தீவுக்கு விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர். இத்துடன் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் லண்டன் திரும்பவுள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications