ஆட்சியை நடத்த முடியாவிட்டால் இடைத் தேர்தலை சந்திப்போம்- திக்விஜய் சிங்

மமதா பானர்ஜியின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியினர் பெரிதாக கவலைப்படுவது போலத் தெரியவில்லை. அவரது முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், திரினமூல் காங்கிரஸை நாங்கள் எப்போதும் நல்ல நண்பராகவே பார்க்கிறோம். ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறிய பின்னரும் கூட நல்ல நண்பராகவே பார்க்கிறோம். இறுதி முடிவு தெரியும் வரை அவர்கள் எங்களது நண்பர்தான் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இது மமதா பானர்ஜியின் இன்னும் ஒரு அரசியல் நடவடிக்கை. மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு ஆட்சியைத் தேர்வு செய்கிறார்கள். அதை அவர்கள் நிறைவு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அது முடியாதபட்சத்தில் இடைத் தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும். நாங்கள் இடைத் தேர்தலுக்குத் தயார்.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது நாட்டு நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாகும். இது அரசியல் ரீதியாக வரவேற்கப்படாது என்பது எங்களுக்குத் தெரியும்தான். ஆனால் மக்கள் நலன் அதை விட முக்கியமானது என்பதால் அதை எடுத்தோம். அதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்போம். எப்படி, அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பை உறுதியாக இருந்து சமாளித்து வெற்றி கண்டோமோ அதேபோல இதிலும் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றார் திக்விஜய் சிங்.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications