டீசல் விலை உயர்வு: சென்னையில் 10,000 மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

மத்திய அரசு டீசல் விலையை ரூ.5 உயர்த்தியது. மேலும் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர்களில் ஆண்டிற்கு 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து நாளை நாடு தழுவிய பந்த் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமேஸ்வரம் போஸ், மாநில செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், பொருளாளர் தூத்துக்குடி சேவியர் வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசின் டீசல் விலை உயர்வு அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரட்டி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதுவரை அனைத்து மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லமாட்டார்கள். தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் அன்பழகனார், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் மாநிலத்தலைவர் வேணுகோபால் ஆகியோர் பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் உட்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications