ராமநாதபுரம் வல்லபை விநாயகர் கோவில் பந்தலுக்கு மர்ம கும்பல் தீ வைப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த் வல்லபை விநாயகர் கோவில் பந்தலுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதி பதட்டமாக காணப்படுகிறது.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தைக்கடை பகுதியில் பழமை வாய்ந்த வல்லபை விநாயகர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று அந்த பந்தலின் முன்பகுதியில் தீ வைத்துவிட்டு தப்பியோடியது. அப்போது கோவிலை சுத்தம் செய்யும் பெண் அந்த கும்பல் தீ வைத்ததைப் பார்த்து கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் பந்தலில் இருந்த ஸ்பீக்கர்கள், மைக் செட்டுகள், சேர்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாகின. மேலும் பந்தலின் பெரும் பகுதி எரிந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் அங்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து கோவில் முன்பு கூடியிருந்தவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி பதட்டமாகக் காணப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications