ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் - ம.பி. எல்லையில் வைகோ தடுத்து நிறுத்தம்

ராஜபக்சே ம.பி மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார். அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்.
ஆனால் மத்திய அரசும், ம.பி. அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டன. இதையடுத்து ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் வைகோ. மேலும் தனது தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏராளமான பேருந்துகளில் சாஞ்சிக்கேக் கிளம்பினார்.
இன்று வைகோ உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநில எல்லையை அடைந்தனர். அங்கு மகாராஷ்டிரா - மத்தியரப் பிரதேச எல்லையில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்துர்னா என்ற ஊரை அவர்கள் அடைந்தபோது போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து ஜபல்பூர் சரக ஐஜி மதுகுமார் கூறுகையில், மதிமுகவினர் வந்த வாகனங்கள் அனைத்தும் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மேற்கொண்டு முன்னேற அனுமதிக்கப்படவில்லை என்றார்.
இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களை எப்படி ம.பி அரசும், போலீஸாரும் கையாளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
மதிமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications