மெக்சிகோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள்-சுரங்கம் தோண்டி தப்பியோட்டம்
பிட்ராஸ் நெக்ராஸ்: அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது. தப்பியோடிய கைதிகளை போலீசாரும், ராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள மெக்சிகோ நாட்டு சிறையில், கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய 730 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிறையில் உள்ள கைதிகளை கணக்கு எடுத்தனர்.
அப்போது சிறையில் இருந்த 132 கைதிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிறையில் இருந்த கைதிகளில் 132 பேர் சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்தது.
கைதிகள் தப்பியோடி சுரங்கம் 21 அடி நீளமும், 4 அடி சுற்றளவும், 9.5 அடி ஆழமும் கொண்டதாக இருந்தது. சிறையில் இருந்து சுரங்கம் வழியாக வெளியே வந்த சிறை கைதிகள், சுரங்கம் முடியும் இடத்தில் இருந்த வேலியை வெட்டி எறிந்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.
கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சிறைத் துறை அதிகாரி உட்பட 3 முக்கிய சிறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து சிறை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சிறையில் உள்ள சுரங்கம் ஒரே நாளில் தோண்டப்பட்டது அல்ல. பல மாதங்களாக இந்த பணி நடைபெற்று வந்துள்ளது. சிறையில் அதிகளவிலான கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5ல் ஒரு பங்கு கைதிகள் தப்பியோடி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
சுரங்கத்தில் பல இடங்களிலும் மின் வயர்கள், கயிறுகள் ஆகிய கிடைத்துள்ளது. எனவே தப்பியோடிய கைதிகள் பல நாட்களாக திட்டமிட்டு, சுரங்கம் தோண்டி தப்பியோடி உள்ளனர் என்றார்.
தப்பியோடிய சிறை கைதிகளை கைது செய்யும் பணியில் போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடுவது இது முதல் சம்பவம் அல்ல. ஏனெனில் கடந்த 2010 டிசம்பர் மாதம் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள டெக்சஸ் நகரில் இருந்த ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 153 கைதிகள் தப்பியோடியுள்ளனர். ஆனால் அதற்கு சிறைத்துறை பணியாளர்களில் 41 பேர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications