காவிரிப் பிரச்சினை... நாளை கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் சம்பா பயிர்கள் நீரின்றி வாடி வருவதையும், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசிய ஜெயலலிதா, தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
தமிழகம் கேட்கும் தண்ணீரை விட முடியாவிட்டாலும் கூட தினசரி 1 டிஎம்சி வீதம் 30 நாட்களுக்கு விடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டார் கர்நாடக முதல்வர் ஷெட்டார். மேலும் கூட்டத்திலிருந்தும் அவர் வெளிநடப்புச் செய்து விட்டார்.
இதனால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகம் தமிழகத்தின் கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஷெட்டார். அப்போது காவிரிப் பிரச்சினையில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு
இந்தநிலையில், அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளைப் பொறுத்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடுவதை எதிர்த்து நடத்தி வரும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக கர்நாடக விவசாயிகள் அமைப்புகள் அறிவித்துள்ளன.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications