இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்தல்
டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்க வேண்டும் என்று இந்தியா வந்துள்ள அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். அவர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது பிரதமர் ராடபக்சேவிடம் கூறியதாவது,
இலங்கையில் உள்ள தமிழர்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் கடல் எல்லையைக் கடக்கையில் அவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும் விட்டுவிட்டு மனிதாபிமான முறையில் இலங்கை ராணுவத்தினர் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதன் பிறகு ராஜபக்சே கூறியதாவது,
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள 3 மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. பிற பகுதிகளில் தேர்தல் நடத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இனவாத பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு அங்குள்ள தமிழர்களை அவர்கள் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மீனவர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். இது தவிர வணிக மேம்பாடு, பொருளாதார உடன்படிக்கைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடந்தது.
இலங்கையில் நடந்த கவிலவஸ்து புராதான சின்னக் கண்காட்சியை 30 லட்சம் பேர் கண்டு மகிழ்ந்தனர் என்று தெரிவித்த ராஜபக்சே அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் ராஜபக்சேவுக்கு விருந்தளித்தார்.












Click it and Unblock the Notifications