தமிழக கப்பலில் தூத்துக்குடி பயிற்சி மாலுமி் மாயம்: கேப்டன் உள்பட 37 பேரிடம் தீவிர விசாரணை
தூத்துக்குடி: ஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் பணியாற்றிய மாலுமி மாயமானது குறித்து தனி்ப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் மகன் கண்ணன். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எம்.வி. தமிழ் அண்ணா என்ற சரக்கு கப்பலில் பயிற்சி மாலுமியாக பணியாற்றி வந்தார். இந்த கப்பல் கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு தூத்துககுடிக்கு புறப்பட்டது. மறுநாள் தாய் லெட்சுமியிடம் கண்ணன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் 5ம் தேதி கண்ணனை திடீரென காணவில்லை. கடலோர காவல்படை மற்றும் விமானப்படை விமானம் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி அந்த கப்பல் தூத்துககுடிக்கு வந்ததும் தூத்துக்குடியைச் சேர்ந்த கேப்டன் ரோஜர் தருவைகுளம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தன் மகன் கண்ணனை கண்டுபிடித்து தருமாறு சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி 15 நாட்களுக்குள் அவரை உயிருடனோ, பிணமாகவோ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என டிஜிபி மற்றும் பூம்புகார் ஷிப்பிங் நிறுவன மேலாளர் தாமசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கேப்டன் ரோஜர் உள்ளிட்ட 37 பேரிடம் கண்ணன் என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications