ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு- சென்னையில் ரயில் மறியல், தூதரகம் முற்றுகை- திருமா, வேல்முருகன் கைது

இலங்கை தூதரகம் முற்றுகை- திருமாவளவன் கைது
சென்னையில் இலங்கை தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இதனால் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை 9 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ரயில் மறியல்- வேல்முருகன் கைது
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை மறிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அறிவித்திருந்தார். இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து வேல்முருகன் மற்றும் அவரது கட்சியின் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வேல்முருகனும் அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
பாஜக அலுவலகம் மீது தாக்குதல்
இதனிடையே ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்த மத்திய பிரதேச பாஜக அரசைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கியும் முற்றுகைப் போராட்டத்தை தமிழின உணர்வாளர்கள் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின் போது பாஜக அலுவலகம் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
திருச்சியில்...
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினரும் நாம் தமிழர் இயக்கத்தினரும் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கத்தில் பெரியார் தத்துவ மையம், ஆதித் தமிழர் பேரவையினர் லால்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் மகிந்த ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications