சென்னையில் கடும் ட்ராபிக் ஜாம்... கொளுத்தும் வெயிலில் 4 மணி நேரம் மக்கள் திணறல்!

இதனால் போலீசார் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
சென்னை நகரின் சாலைகள் ஏற்கனவே நரகத்தின் வாசல்களாகத்தான் உள்ளன. எந்த நேரத்திலும் நம்மை விழுங்கப் பார்க்கும் பெரும் குழிகள், இடறிவிடத் தயாராக உள்ள பள்ளங்கள், பாளமாய் வெடித்துக் கிடக்கும் சாலைகள், லேசான மழை பெய்தாலும் உழுதுவிட்ட வயலாய் காட்தி தரும் தெருக்கள்....
இதில் மெட்ரோ ரெயில் பணி வேறு நடப்பதால் தினந்தோறும் வாகன நெரிசல் என்பது வழக்கமாகிவிட்டது. மடிப்பாக்கத்திலிருந்து மவுன்ட் ரோடுக்குப் போக 2 மணி நேரம் கூட ஆகிறது சமயங்களில்.
இந்த நிலையில் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் போராட்டங்களால், போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தி, மக்களை மூச்சுதிணற வைக்கிறது.
நேற்று காலை 9 மணியில் இருந்து, பிற்பகல் 1 மணி வரை சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகள் வாகன நெரிசலால் சிக்கி திணறின.
நுங்கம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அமைந்தகரை போன்ற பகுதிகளில் வாகனங்கள் நகர முடியாமல், நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் நின்றிருந்தன.
இதனல் காலை 10 மணிக்கு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் 2 அல்லது 3 மணி நேரம் தாமதமாக செல்ல நேரிட்டது.
இந்த வாகன நெரிசலை போலீசார் சரியாக கையாண்டு சீர்படுத்தவில்லை என்பது பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருந்தது.
மூலைக்கு மூலை நின்றபடி, வழிப்பறிக்கு இணையாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் என்ற பெயரில் பணம் பிடுங்குவதில் காட்டும் ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ட்ராபிக்கை சீர் செய்வதில் காட்டுகிறார்களா பாருங்கள் என குற்றம்சாட்டியதைப் பார்க்க முடிந்தது.
குறிப்பாக அனுமதி பெற்று அல்லது அனுமதி இன்றி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும் போது, அதுபற்றிய முன்னறிவிப்பு எதையும் போலீஸ் செய்யாமல் விடுவதையும் குற்றம்சாட்டினர்.
புதிய கமிஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்றுள்ளார். தங்களின் 'அயராத அரசியல்' பணிகளுக்கிடையில், இந்த மக்கள் பணிக்கும் போலீசார் கொஞ்சம் முக்கியம் தந்தால் நன்றாக இருக்கும். செய்வார்களா?
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications