ராணுவமுகாமில் குழந்தை பெற்ற இங்கிலாந்து வீரங்கனை
லண்டன்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து இராணுவத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையில், இங்கிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படை பிரிவில் மொத்தமாக 500 பெண்கள் உள்ளனர். ஆப்கானின் நேட்டோ இராணுவ முகாமின் ஆயுதப் படைப் பிரிவில் ஆறு மாதங்களுக்கு முன் வந்த, இராணுவ வீராங்கனை ஒருவர் இரு வாரங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிவித்தார். இராணுவ மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், அப்பெண் 34 வார கர்ப்பிணியாக உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஐந்து வார குறைப் பிரசவமாக, கடந்த 18ம் ஆண் குழந்தையை அந்த வீராங்கனை பெற்றெடுத்தார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள இங்கிலாந்து இராணுவ செய்தி தொடர்பாளர், ராணுவ முகாமில் இருந்த வீராங்கனைக்கு திடீர் பிரசவம் நிகழ்ந்துள்ளது. இப்பொழுது தாயும்- சேயும் நலமாக உள்ளனர். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தப் பின், தாயும்- சேயும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.
தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமலே கடினமான பயிற்சியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் அந்த வீராங்கனை ஈடுபட்டிருந்தார். ராணுவ வீராங்கனை ஒருவர் பயிற்சி முகாமிலேயே குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications