2வது நாளாக இன்றும் விநாயகர் சிலைகள் கரைப்பு... பலத்த போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம்முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளைக் கரைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் நேற்று 185 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. சிவசேனா குமாரராஜா பிரிவு சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை காசிமேடு கடலில் கரைத்தனர்.
அதேபோல இந்து மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகத்தினர் வைத்திருந்த சிலைகளை நீலாங்கரையில் கரைத்தனர்.
இன்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் வைத்துள்ள சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து வேறு பாதைக்கு யாரும் மாறக் கூடாது என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கடலில் சிலைகளைக் கரைக்கும் இடத்தில் கிரேன்களும் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications