ஆலப்புழை அருகே கார் மீது நெல்லை ரயில் மோதி விபத்து- 5 பேர் பலி
ஆலப்புழை: கேரள மாநிலம் ஆலப்புழை அருகே ஆள் இல்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது நெல்லை ரெயில் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம் திருக்கண்ணாப்புழையை சேர்ந்த கார்த்திகேயன், பெரும்பமையைச் சேர்ந்த நாராயணன், பூச்சாக்கலைச் சேர்ந்த செல்லப்பன், நெய்த்துபுரைக்கல்லை சேர்ந்த வின்சென்டின் 3 வயது குழந்தை நெல்பின் ஆகியோரும் சேர்ந்து நேற்று ஒரு காரில் அரூர் பஸ் நிலையம் நோக்கி சென்றனர். அரூர் பகுதி, இவர்கள் சென்ற கார், அரூர் பாலத்தை அடுத்துள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது நெல்லை நோக்கி வந்த ஹப்பா எக்ஸ்பிரஸ் ரயில் மீது கார் மோதியது. இதனால் 100 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தில் கார் இழுத்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த ஓட்டுநர் உட்பட அனைவருமே நசுங்கி உயிரிழந்தனர்.
இதனால் பொதுமக்கள் ரயிலை மறித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications