காவிரி நீரைக் கேட்டா 91-ஆம் ஆண்டு நிலைமைதான்....: தமிழர்களை அச்சுறுத்தும் கன்னட அமைப்புகள்

காவிரி நதிநீர் விவகாரத்தால் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே நீண்ட்காலமாக மோதல் இருந்து வருகிறது. 1991-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனை வெடித்த போது கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொடுந்தாக்குதலுக்குள்ளாயினர். மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் அகதிகளாக இடம் பெயரும் நிலைக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் காவிரி நீரைப் பெறுவதில் தமிழக அரசு உறுதிகாட்டி வரும் நிலையில் கன்னட அமைப்புகள் பகிரங்கமாக தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறபப்டுகிறது. தமிழக அரசு மீண்டும் காவிரி நீரை கோரினால் 1991-ஆம் ஆண்டு நிலைமைதான் ஏற்படும் என்று அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து கர்நாடக தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி தங்குமாறு கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்ச்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
கர்நாடக தமிழ்ச் சங்கத்தினரைப் பொறுத்தவரையில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை ஆதரிப்பது என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் சில கன்னட இனவெறி அமைப்புகள் வேண்டுமென்றே இதுபோன்ற எச்சரிக்கை விடுவதாக கூறப்படுகிறது..












Click it and Unblock the Notifications