சிவகாசி பட்டாசு விபத்து- பலியானோர் குடும்பத்துக்கு அமிர்தானந்தமயி நிதி உதவி
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு மாதா அமிர்தானந்தமயி நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நாளை மறுநாள் நடைபெறும் அமிர்தானந்தமயியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
மேலும் அமிர்தானந்தமயி ஆசிரமங்கள் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் 500 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. வறுமையில் வாடும் 3 ஆயிரம் பேருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமிர்தானந்தமயி தேவி அறக்கட்டளை மூலம் 200 பேருக்கு இருதய அறுவை சிகிச்சையும், 50 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications