மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க என்ன நடவடிக்கை: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
மதுரை: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டிச் செல்லாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதால் அவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினோத்குமார் சர்மா, ஏ.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பீட்டர்ரமேஷ்குமார், தமிழக அரசு சார்பில் புகழேந்தி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி செல்லாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications