திருமண மோசடி வழக்கு: கேரள அழகி ஷானாஸின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கேரளாவைச் சேர்ந்த பெண் ஷானாஸ் அண்மையில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஷானாஸ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை எடுத்துச் சென்றதாக புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷானாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொன். கலைராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
சரவணன் தவிர ராஜா என்பவரும் ஷானாஸ் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முதல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த ஷானாஸை இந்த வழக்கிலும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷானாஸ் தங்களை ஏமாற்றியதாக வாலிபர்களும், ஆண்கள் தான் தன்னை ஏமாற்றியதாக ஷானாஸும் தெரிவித்திருந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications