கர்நாடக அணைகளில் 75% நீர் இருப்பு: தமிழகத்துக்கு தர வேண்டியது 9,000 கன அடி.. தந்தது 4,000 கன அடி!
டெல்லி: தமிழகத்துக்கு தினமும் 9,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், வெறும் 4,000 கன அடி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.
நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பின்படி செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு தினந்தோறும் 9,000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், 22, 23, 24ம் தேதிகளில் 4,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடகம் எவ்வாறு அமலாக்குகிறது என்பதை மத்திய நீர்வள ஆணையம் கண்காணித்து வருகிறது. இதில், தமிழகத்துக்கு வெறும் 4,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்று 9,000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் 75% நீர் இருப்பு:
இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கர்நாடக அணைகளில் 75 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 50 சதவீத பாசனம் நிறைவேறிவிட்ட நிலையில், தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹாரங்கி ஆகியவற்றில் 85 டிஎம்சி அளவுக்கு நீர் உள்ளது என்று தமிழகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லை என்று கர்நாடகம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருநாளைக்கு ஒரு அடி குறையும் மேட்டூர் அணை:
இந் நிலையில் கர்நாடகத்தில் இருந்து நீர் வருவது குறைந்துவிட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு 280 மெகாவாட் மின்சாரமே கிடைத்து வருகிறது.
அணையின் நீர் மட்டமும் ஒரு நாளைக்கு ஒரு கன அடி வீதம் குறைந்து வருகிறது.
வழக்கமாக ஜுன் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் குடிநீர் தேவையையும், ஜுன் மாதம் முதல் ஜனவரி மாதம் முடிய பாசன தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.
ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் உள்பட 11 மாவட்டங்களின் பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் போது அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் கீழ் கதவணை மின் திட்டங்கள் மூலம் 430 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும் போது இந்த மின் நிலையங்கள் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியின் அளவும் குறைகிறது.
தற்போது மின் பற்றாக்குறையால் தத்தளித்து வரும் தமிழகத்தில் பருவமழை தவறியதால் நீர்மின் நிலையங்கள் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி ஆற்றில் பரவியுள்ள ஆகாய தாமரை செடிகள், கீழ் கதவணை மின் திட்டங்களுக்கு செல்லும் தண்ணீரின் அளவை குறைப்பதால் இந்த மின் திட்டங்கள் மூலம் நடைபெறும் மின் உற்பத்தி அளவும் கணிசமான அளவு குறைந்துள்ளது. எனவே இப்போது மொத்தம் 280 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications