கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடந்து வருகிறது: அணு சக்தி துறை தலைவர்

அணு சக்தி தொடர்பான மாநாடு மும்பையில் நடந்தது. அதில் அணு சக்தி துறை தலைவர் ஆர்.க. சின்ஹா கலந்து கொண்டார்.
மாநாட்டிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்தின் அறிவுறுத்தலின்படி செய்லபட வேண்டியிருப்பதாலும், கூடங்குளம் அணு மின் நிலைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் மின் உற்பத்தி எப்பொழுது துவங்கப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அடுத்த ஆண்டில் முதல் அணு உலையில் மின் உற்பத்தியை துவங்க திட்டமிட்டிருக்கிறோம்.
தற்போது முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதில் எந்த தொழில்நுட்ப பிரச்சனையும் ஏற்படவில்லை. கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கினால் தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை ஓரளவுக்கு தீரும்.
இரண்டாவது அணு உலையை அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் மற்றும் அணு உலையை மக்கள் எதிர்ப்பதும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளன. இருப்பினும் திட்டமிட்ட காலதத்திற்குள் இரண்டாவது அணு உலையை செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும்.
தற்போதைய காலகட்டத்தில் அணு உலை அமைக்க தொழில்நுட்பம், மூலப்பொருள் கிடைப்பதில் எல்லாம் சிக்கல் இல்லை. அணு உலையை பொதுமக்கள் எதிர்ப்பது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அணு உலை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் 9,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையம், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மொத்தம் 2 அணு மின் நிலையங்கள், கல்பாக்கம் அணு மின் நிலை விரிவாகக்ப் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.
வரும் 2021ம் ஆண்டில் நம் நாட்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்திய செய்ய இலக்கை நிர்ணயிததிருக்கிறோம் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications