கட்சி சட்டத்தை திருத்தி நிதின் கட்காரியை 2வது முறையாக தலைவராக்கும் பாஜக

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சூரஜ்கண்ட் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக தலைவராக நிதின் கட்காரியை இரண்டாவது முறையாக தேர்வு செய்ய உள்ளனர். ஒரு நபர் 2 முறை கட்சி தலைவர் பொறுப்பை வகிக்கும் வகையில் பாஜக கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அக்கட்சி ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
கட்காரியின் பதவி வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதையடுத்து அவரை இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்க கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் மும்பையில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படட்து. இதையடுத்து நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தில் கட்காரி இரண்டாவது முறையாக பாஜக தலைவராவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.
இதையடுத்து கட்காரி வரும் 2015ம் ஆண்டு வரை தலைவர் பொறுப்பில் இருப்பார். தற்போதுள்ள பாஜக சட்டப்பட்டி ஒருவர் ஒரு முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்காரியை மீண்டும் தலைவராக்குவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முனைப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications