பெயர்: பி.ஆர்.பி என்கிற பழனிச்சாமி.. வழக்குகள் எண்ணிக்கை 13!
மதுரை: கிரானைட் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள தொழிலதிபர் பிஆர்பி என்கிற பழனிச்சாமி மீது 13வதாக ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போதைய ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் கீழவளவு போலீசில் 6 வழக்குகளும், ஒத்தக்கடை போலீசில் 4 வழக்குகளும், மேலூர் போலீசில் ஒரு வழக்கும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தராபுரம் அக்ரஹாரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ராணி மதுரை மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், மேலூரை அடுத்த இ.மலம்பட்டியில் நான் எனது கணவர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வசித்து வந்தோம். எனது கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால், எனது தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். இதற்கிடையில் எனது மாமியார் இறந்து விட்டார். அதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அங்கு எனது கணவருக்கு சொந்தமான 52 சென்ட் நிலம் அபகரிக்கப்பட்டது போனது தெரியவந்தது.
அந்த இடத்தில் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் கிரானைட் கற்களால் மறைத்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, எனது கணவர் அந்த நிலத்தை அடமானம் வைத்ததாக கூறினர். மேலும், எனது கணவரைப் போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்துள்ளனர். இதைப் பற்றிக் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பழனிச்சாமி, சுரேஷ் உள்ளிட்ட6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமி மீது போடப்படும் 13வது வழக்காகும் இது.
ஏற்கனவே பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications