உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கூடங்குளம் அணு மின் நியைத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் அரசு பொதுப் பணி்த்துறை விருந்தினர் மாளிகையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராம்பாபு தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வருகிற 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாககிள் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் உதயகுமார்
உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவதை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் கூடங்குளத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+