செல்லாத பட்டா தந்ததாக புகார்: முன்னாள் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு 'நோட்டீஸ்'

மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் கே.கே.ரமேஷ். பொதுநல வழக்காடு மையத்தின் நிர்வாக அறங்காவலரான இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 17 பேர், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய கலெக்டர் சகாயத்திடம் மனு கொடுத்தனர். இது குறித்து கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் சகாயம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் சகாயத்தின் உத்தரவின் பேரில் கடந்த 26.1.2012 அன்று நிலையூர் பகுதியில் 17 பேருக்கு மதுரை தெற்கு தாசில்தார் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பட்டா வாங்கியவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட சென்றனர். அப்போது அதே இடத்தில் வேறு சிலர் வீடு கட்டுவது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தாசில்தாருக்கு மனு கொடுத்தேன். அப்போது அவர் கடந்த 26.1.2012 அன்று 17 பேருக்கு வழங்கப்பட்ட பட்டா செல்லாது என்று கூறினார். இது குறித்து மதுரை கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயன்றேன். ஆனால் அவர், என்னை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார்.
கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏழைகள் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி, மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு மனு அனுப்பினேன். ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை மதுரை கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அல்லது இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, துரைச்சாமி ஆகியோர், இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், மதுரை கலெக்டர், முன்னாள் கலெக்டர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications