திடீரென கருமேகங்கள் சூழ்ந்த சென்னை.. சூறாவளி, முறிந்தன மரங்கள்..தூசு மண்டலம், பேய் மழை-மக்கள் பீதி!!

இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை திடீரெண என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.
தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.
இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில்தான் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் பல்வேறு பகுதிகளி்ல் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளியூர் கிளம்பும் பல ரயில்களும் தாமதமாகியுள்ளன.
இந்த மழையின் வரவு குறித்து எந்தத் தகவலையும் முன்பே தெரிவித்தாக வானிலை மையம், இந்த திடீர் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பெரும் மிரட்டலாக வந்த இந்த திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications