பிரதமரின் மகள் 2ம் தேதி சிதம்பரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் உபிந்தர் சிங் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளார். இவர் தனது கணவருடன் வரும் 2ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்க உள்ளார்.
அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் பலத்த பாதுகாப்புடன் நடராஜர் கோவிலுக்கு செல்ல உள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி திரும்ப உள்ளார்.
உபிந்தர் சிங்கின் வருகையை முன்னிட்டு, சிதம்பரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு படையை 5 வீரர்கள், சிதம்பரத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள், சிதம்பரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.எஸ்.பி. ராமலிங்கம், சிதம்பரம் தாசில்தார் தனசிங் ஆகியோரிடம் ஆலோசித்தனர்.
மேலும் அண்ணாமலை பல்கலை கழக மைதானத்தில் உள்ள ஹெலிபேட், குண்டு துளைக்காத கார் செல்லும் சாலைகள், நடராஜர் கோவில் ஆகிய இடங்களை மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸ் உயரதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications