எந்த ஒளியையும் காணோம்: ராமதாஸ் கிண்டல்
சென்னை: தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தமிழகத்தில் எந்த ஒளியையும் காணவில்லை என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து, பாமக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர் கே.என்.சேகர், திருக்கச்சூர் ஆறுமுகம், கோபால், வழக்கறிஞர் பாலு, வடசென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், பி.கே.சேகர், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் தடை இல்லாத மின்சாரம் வழங்குவோம். தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போது சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 16 மணிநேரம் மின்தடை அமலில் உள்ளது. ஒளிமயமாக மாற்றுவதாக கூறிய நிலையில், தற்போது எந்த ஒளியையும் காணோம்.
தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் போராடுகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட இன்னும் 1 ஆண்டு ஆகும் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டை சீரமைக்க என்ன வழி? இது குறித்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் யோசிக்கவில்லை.
புதிய மின் திட்டங்கள் தொடங்காமலும், திட்டமிட்டு மின் வினியோகம் செய்யாமலும் விட்டதால் தான், தற்போது இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications