யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!

ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் பற்றாக்குறைக் காரணமாக
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கியது மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்த வகையில் மட்டும் மின் வாரியத்துக்கு ரூ.1,623 கோடி கூடுதல் செலவாகி உள்ளதாம்.
இதனால் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு 2012ல்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தற்போதும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். ஆனால் டீசல் விலை உயர்வு, நிலக்கரி விலை உயர்வு, மின்சாரத்தை கொள்முதல் செய்வது மற்றும் கொண்டு வருவதற்கான செலவு உயர்ந்து விட்டன. இதனால் மின் வாரியத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,623 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் மின்வாரியம் உள்ளது.
எனவே மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு 6 பைசா உயர்த்தினால் தான் இழப்பை சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளது மின்சார வாரியம்.
வழக்கமாக மின் கட்டணம் உயர்த்தப்படும் போது பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவது பற்றி ஆணையம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆனால் நிலக்கரி உயர்வின் காரணமாக மின் உற்பத்தி விலை அதிகமானால் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் உடனுக்குடன் விலையை உயர்த்தலாம் என்றும் விதி உள்ளதாம்.
அதன் அடிப்படையில் அடுத்த மாதம் முதல் யூனிட்டுக்கு 6 பைசா விலை உயர்த்த வழிவகை வாய்ப்புகள் உள்ளன.
அதாவது இதுபற்றி ஆணையம்தான் முடிவு எடுத்து அறிவிக்குமாம், இதில் மாநில அரசுக்கு சம்பந்தமே இல்லையாம். (அப்படியா!?)
மீண்டும் உயரப் போகும் மின் கட்டணத்துக்கு தயாராகுங்கள்!.
டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்த அடியாக மின் கட்டண உயர்வு வரப் போகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications