அணு உலை எதிர்ப்பு போராட்டம்: இடிந்தகரையில் உதயகுமாரை சந்தித்த வைகோ

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர். மேலும் இடிந்தகரை ஆலயம் முன்பு மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இத்தனை போராட்டங்களுக்கும் நடுவே முதல் அணு உலையில் ச்ததமில்லாமல் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கி நடந்து வருகிறது. மக்கள் போராட்டம் ஒரு புறம் இருக்க மறு பக்கம் மின் உற்பத்தியைத் துவங்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை சென்றார். அங்கு அவர் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அணு சக்திக்கு எதிரான அரசியல் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை இடிந்தகரையில் நடக்கிற்து. இதில் அடுத்தக் கட்ட போராடட்ம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications