ஷாப்பிங் கூட கூப்பிட்டுச் செல்ல மறுக்கிறாரே கணவர்.. தூக்கில் தொங்கிய பெண்!
சென்னை: கணவர் ஷாப்பிங்குக்கும், கோவிலுக்கும் கூட்டிச் செல்ல மறுத்ததற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 21 வயதாகும் இவர் ஆயுதப் படை போலீஸ் ஆவார். இவருக்கும் சென்னை மாடம்பாக்கம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த கணேசனுக்கும் திருமணம் செய்து வைத்தனர் குடும்பத்தார். கணேசனும் ஆயுதப் படை போலீஸ்காரர்தான்.
சம்பவத்தன்று கணவரை கோவிலுக்கும், ஷாப்பிங்குக்கும் கூட்டிச் செல்லுமாறு கேட்டுள்ளார் தனலட்சுமி. ஆனால் அதற்கு மறுத்துள்ளார் கணேசன். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதையடுத்து கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார் கணேசன்.
சில மணி நேரம் கழித்துத் திரும்பியபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்த கணேசன், அங்கு படுக்கை அறை உட்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு கதவைத் தட்டினார். ஆனால் சத்தம் ஏதும் வரவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தார். அங்கு மின்விசிறியில் தனலட்சுமி பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து கணேசன் கதறி அழுதார். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து உடலை இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக டிஆர்ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications