ஈவ் டீசிங் கொடுமையால் பிபிஏ பட்டதாரி தீக்குளித்து சாவு: 6 பேருக்கு வலை
நாகை: மயிலாடுதுறையில் பயிற்சி மையத்தில் 6 வாலிபர்கள் ஈவ் டீசிங் செய்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடை பகுதி கொண்டாரெட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி(24). பி.பி.ஏ. பட்டதாரி. அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத விரும்பினார். இதையடுத்து மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார் கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். அப்போது அதே மையத்திற்கு வந்த ஒரு வாலிபருக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் செந்தில்குமார், காளிதாஸ், சிவரஞ்சனியின் எதிர்வீட்டைச் சேர்ந்த சபரி, சண்முகம் மற்றும் 2 பேர், சேர்ந்து கொண்டு அந்த பையனுடன் மட்டும் தான் பேசுவாயா, எங்களுடன் எல்லாம் பேசமாட்டாயா என்று கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அவர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் இனி வீட்டில் இருந்தே படி என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்து தான் படித்து வந்துள்ளார்.
அப்படியும் அந்த வாலிபர்கள் அவரை விடுவதாக இல்லை. எதிர்வீட்டில் இருந்த சபரியும், சண்முகமும் நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனியின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு அவரை ஈவ் டீசிங் செய்துள்ளனர். கிண்டல் செய்ததுடன், அசிங்கமாக பேசியுள்ளனர். இதைக் கேட்டு மனமுடைந்த அவர் பாத்ரூமுக்கு சென்று தனது உடலில் மணணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்1 நீதிபதியிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார். வாலிபர்கள் தன்னை ஈவ் டீசிங் செய்ததால் தான் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த அவர் தனது மரணத்திற்கு காரணமானவர்களின் பெயரைக் கூறவில்லை.
ஆனால் அவரது தந்தை அந்த 6 பேரின் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் தேடி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications