ரிட்டையராகும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.! வீரப்பன் கதையை 300 பக்க நாவலாக எழுத திட்டம்!!

சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் விஜயகுமார் பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கை சி.ஆர்.பி.எப்.ப்பின் அனைத்து பிரிவுகளுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அதிரடிப்படைக்கு விஜயகுமார் பொறுப்பேற்றிருந்த போதுதான் 2004-ம் ஆண்டு வீரப்பன் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக விஜயகுமார் இருந்த போது அயோத்தியா குப்பம் வீரமணியை மெரினாவில் வைத்து சுட்டுக் கொன்றது போலீஸ்.
அதிரடிப்படையில் இருந்து ஹைதராபாத் போலீஸ் அகாதெமியில் ஐபிஎஸ் பயிற்சி நிறுவன தலைவராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக மத்திய துணை ராணுவப் படையின் தலைவராக இருந்து வருகிறார். இவரது பொறுப்பு காலத்தில்தான் மாவோயிஸ்ட் முக்கிய தலைவரான கிஸன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருப்பினும் விஜயகுமாருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அனேகமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றில் ஆலோசகர் பொறுப்பில் விஜயகுமார் நியமிக்கப்பட உள்ளார்.
தன்னுடைய ஓய்வு காலத்தில் வீரப்பன் கதையை மையமாக வைத்து நாவலை எழுதவும் திட்டமிட்டிருக்கிறார் விஜயகுமார்.
இது பற்றி விஜயகுமார் கூறுகையில், என்னிடம் ஆயிரத்துக்கும் அதிகமாக பக்கங்கள் கொண்ட தரவுகள் இருக்கின்றன. என்னுடைய நினைவுகளில் இருந்து அனைத்தையும் ஒருங்கிணைத்து சுமார் 300 பக்கமாகக் கொண்ட நாவலாக எழுத இருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரரின் எழுத்தாக இருக்காது. வெகுஜன வாசகனுக்குரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை உண்மைகள் வருமோ?
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications